
நாம் எல்லோருமே சிறு பிராய பேருந்து பயணங்களை அவ்வளவு சீக்கிரம் மறப்பவர்களல்ல எப்போதும் நினைவுகொள்ளப்படும் பேருந்து பயணங்கள் எல்லோருக்கும் இருக்கும்..
சிறு வயதில் அதிகாலையில் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்ப அதற்கு முந்தைய நாளே ஆயத்தமாகி ஆடைகளை அம்மா அடுக்கி கொண்டிருக்க நமது சொத்துக்களான பொம்மைத் துப்பாக்கி , ஸ்பிரிங் பம்பரம் என பாக்கெட்டில் அடக்க முடிந்த அத்தனையும் நம்மால் பேக் செய்யப் படும்..
ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடணும் லீவு நாள்ல லேட் பண்ணா கூட்டம் அதிகமாயுடும் என்று அப்பா அதீத வேகமாய் இருப்பார்... ஒரு வழியாக மூட்டைகளுடன் பேருந்து நிறுத்தம் வந்து நின்றவுடன் ஆரம்பிக்கும் சண்டை ... "அம்மா இப்பவே சொல்லிட்டேன் ஜன்னல் சீட்டுல நாந்தான்".. தஙகச்சிய உக்கார வச்ச பாத்துக்க... கொஞ்ச நேரம் சும்மா இருடா லொட லொடனு... .
எதையும் காதில் வாங்காமால் வரும் பேருந்தில் ட்ரைவருக்கு பக்கத்தில் சீட் கிடைத்தால் ..... என்று மனம் உற்சாக கனவு காணும்... அவ்வாறே சீட்டும் கிடைத்து அப்பா மடியில் அமர்ந்த பின்பு சற்றே தலை தூக்கி ட்ரைவரின் முகம் காணும் போது அந்தப் பயணம் முழுவதுமான நாயகன் அவரே...
என் சிறுவயது காலம் போல் இப்போது ஓட்டுநர்கள் லாவகம் உடையவர்களா எனத் தெரியவில்லை ஆனால் அப்போது அவர்களே அனைத்தும்..
ஸ்டீயரிங் வீலை அவர் லாவகமாக சுழற்றும் போதும் வண்டியின் போக்கிற்கேற்ப நாமும் சாய்ந்து நிமிரும் போதும் உடலில் ஏற்படும் அந்த அதிர்வுகள் அற்புதமானவை.... ஸ்டீயரிங் வீலை பற்றி நான் கவனித்தவற்றை சொல்லியே ஆக வேண்டும் சிறுவயதின் வட்டமான எந்தப் பொருளையும் வைத்து வாயிலேயே வாகனம் ஓட்ட வைத்த வஸ்து அதுதான்.. மிக அழகாக பச்சை வண்ண ஒயர்களால் வெகு நேர்த்தியாக இடையில் கருப்பும் கலந்து ஸ்டீயரிங் மேல் சுற்றப் பட்டிருக்கும் மனம் அதிலிருந்து அகல வெகு நேரமாகும்
மிக வேகமாக செல்லும் பேருந்தின் ஓட்டுனரே பெரிதும் கவர்வார்.. சட்டையின் காலரில் இளஞ்சிவப்பு துண்டு அணிந்திருப்பார் அவர் கைகள் ஹாரன் அடிக்கச் செல்லும் போது கண்கள் இன்னும் அகலமாய் விரியும்.. அதிலும் ஒன்றிற்கு மேற்பட்ட ஹாரன் இருப்பின் அது இன்னும் உற்சாகமூட்டும்..
ஓட்டுனரிடமிருந்து பார்வை விலகி முன் கண்ணாடி வழியாக சாலையில் பார்வை விழும் அப்போது தோணும் ஒரே விசயம் சாலையை இவ்வளவு அழகாக வேறெங்கிருந்தும் ரசிக்க முடியாது என்பதே...
சாலையானது வாகன ஒளி வெளிச்சத்தில் சரியாக விடியாத அரையிருட்டில் மிக ரம்மியமானதாக இருக்கும் வண்டியின் போக்கிற்கேற்ப சாலை வளையும் அப்போதெல்லாம் சாலையின் இருபுறத்திலும் வரிசையாக மரங்கள் இருக்கும் தூரக்தில் தெரியும் ஒரு மரத்தை குறிவைத்து அது மெதுவாக நகர்ந்து வந்து பேருந்தை நெருங்கியதும் வேகமாக "விஷ்க்" என்ற ஒலியுடன் ஓடி மறையும்
சிறுபிராயப் பயணத்தின் போது நடத்துனரை விடவும் ஓட்டுனரே அதிகம் கவர்வார்.. நடத்துனரின் சில செயல்கள் வெறுப்பூட்டினாலும் அவர் கார்பன் வைத்து டிக்கட் எழுதும் அழகே அழகு... இந்த பையனுக்கெல்லாம் அரை டிக்கட் கிடையாதுங்க முழு டிக்கட்தான் என்று நம்மை நிறக வைத்துப் பார்த்து விட்டு வேகமாக எழுதி கிழித்து தருவார்.. அப்பா நம்மை மடியில் உக்கார வைத்தது வீண் எனினும் அதை பற்றியெல்லாம் சிந்திக்காது மனம்..
சற்றே தூரம் அதிகமாக செல்லக்கூடிய பயணங்களில் முதல் நிறுத்தம் வந்ததும் பேருந்தில் இருந்த அனைத்து ஆளுமை சப்தங்களும் அப்படியே நின்று போகும் பயணங்கள் ஏறிய பிறகு மீண்டும் கியர் பொருத்தி வண்டியை ஓட்டுனர் நகர்த்தும் லாவகம் பின்நாளில் இரும்பு சேரில் உட்கார்ந்து வாயிலேயே நகரா பேருந்து ஓட்டும் போது அப்படியே பிரதிபலிக்கும்..
செல்லும் ஊரின் பெயர் இத்துணை கிலோ மீட்டர் என்பதை தாங்கிய பலகைகள் , மைல்கற்கள் ஊரை விரைவில் அடைந்து உறவினரைப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் பயணம் விரைவில் முடிவடைந்து விடும் என்பதையும் ஊடே நினைவுறுத்தும்..
திருப்பங்களில் மிக லாவகமாக முழுவதும் ஸ்டியரிங்கை வேகமாக வளைத்து பின்பு அப்ப்டியே அதை திருப்பி சுழல விடும் அழகை காணுவது முடியப்போவதை தொலைவில் தெரியும் பேருந்து நிறுத்தம் உணர்த்தும்..
பேருந்து நிலையம் அடைந்தும் வண்டியைவிட்டு கீழே இறங்கி மீண்டும் வந்த வண்டி எவ்வாறு நிறுத்தப் படுகிறது என கவனித்துள்ளீர்களா...? மிக அழகாக ஒரு புற சக்கரம் மட்டும் வண்டியின் பாடிக்கும் வெளியே நீண்டு திருப்புவதற்கு வசதியாக நிறுத்தப்படும்..
நல்ல வெளிச்சத்தில் நாம் வந்த பேருந்தை ஒரு முறை உற்று நோக்கி இந்த வண்டியிலா நாம் வந்தோம் ஆகா... என்ற சந்தோசத்துடன் நகர்வதில் மிகப் பெருமிதம் எனக்கு..
இது என் முதல் பதிவு எனக்கு தெரிந்த நடையில் எழுதி உள்ளேன்.. குறையிருப்பின் சுட்டிக்காட்டவும் நன்றி..
முதல் பதிவா ஷேக்? நல்லா இருக்கு! பயணத்தைப் பற்றி எழுதி பதிவுப்பயணத்தை துவக்கி இருக்கீங்க, வாழ்த்துகள். என் இளமைக்கால ரயில் பயணங்களை அசை போட வைத்தது. ;-) Please carry on....don't stop.
ReplyDeleteவாழ்த்துகள் மச்சி... கண்டினியூ பண்ணு... நல்லா வரணும்.
ReplyDeleteநன்றிகள் அறிவு மாம்ஸ் :-))) நன்றிகள் அர்ஜுன் :-))
ReplyDeleteமச்சி பேக் ரவுண்ட்ல விளக்கு எல்லாம் வச்சி இருக்கியே , படமா எடுக்கிற , என்ன படம் மச்சி
ReplyDeleteஎன் அளவுக்கு சூப்பரா எழுதாட்டியும் ஏதோ சுமாரா எழுதி இருக்கீங்க :)
ReplyDeleteநல்ல தொடக்கம்... உங்கள் பயணம் இனிமையாய் தொடர மனமார்ந்த வாழ்த்துகள் :-)
ReplyDeletegood
ReplyDeleteமிகவும் ரஸித்து எழுதப்பட்ட பதிவு! நினைவுகளைச்சற்று பின்னே தள்ளி, சிலாகித்த..இளமைப்பருவத்தை..ஆட்டோக்ராஃபாய், வேறு வில்லங்க விசயங்களைக்கலக்காமல், எழுதிய நேர்மை சிறப்புதான்! படித்தேன்! ரசித்தேன்! வாழ்த்துகள்!
ReplyDeleteசூப்பர் நண்பா ............. ஆரம்பமே அசத்தலா இருக்கு .............
ReplyDeleteஇந்த எழுத்து பயணம் நீண்ட தூரம் பயணிக்க வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி ....பேருந்து பயண நாட்கள் கண்முன் விரிந்தது!....தொடர்ந்து எழுதுங்க :)) @shanthhi
ReplyDelete>>இது என் முதல் பதிவு எனக்கு தெரிந்த நடையில் எழுதி உள்ளேன்.. குறையிருப்பின் சுட்டிக்காட்டவும் நன்றி..
ReplyDeleteமாப்ள. உன் நடை சரி இல்லைன்னு எந்த ஃபிகர் சொல்ல முடியும்? ஹி ஹி
>>
ReplyDeleteசிறுபிராயப் பயணத்தின் போது நடத்துனரை விடவும் ஓட்டுனரே அதிகம் கவர்வார்.. நடத்துனரின் சில செயல்கள் வெறுப்பூட்டினாலும் அவர் கார்பன் வைத்து டிக்கட் எழுதும் அழகே அழகு... இந்த பையனுக்கெல்லாம் அரை டிக்கட் கிடையாதுங்க முழு டிக்கட்தான் என்று நம்மை நிறக வைத்துப் பார்த்து விட்டு வேகமாக எழுதி கிழித்து தருவார்.. அப்பா நம்மை மடியில் உக்கார வைத்தது வீண் எனினும் அதை பற்றியெல்லாம் சிந்திக்காது மனம்..
அழகிய வர்ணனை..
யோவ், முதல்ல இந்த வோர்டு வெரிஃபிகேஷனை தூக்குய்யா..
நன்றிகள்.. classic, renu, karu-naaku, royal-ranger,senthil மாம்ஸ் மற்றும் அறிமுகமில்லா அந்த நண்பருக்கும்.... :-))
ReplyDelete@senthilcp செஞ்சுடலாம் மாம்ஸ்.. :-))
ReplyDeleteரசனையான ஆள் மச்சி நீ!!! அழகு ததும்பும் பதிவு...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அருமை.. அதெல்லாம் செரித்தான் ஏன் இந்த இலக்கிய நடை.. சும்மா பேச்சு வழக்கு மொழியிலே எழுதுங்க...! அம்சமா வரும்.. அதுமில்லாம கருத்து பதிவுகளுக்கு பதில் சொல்றீரே.. இந்த பணிவு போதும்.. பெரிய ஆளா வருவீர்.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றிகள் மச்சி @balu_sv நன்றிகள் ஆனந்த் ராஜ் சார்.. :-))))
ReplyDeleteநல்லாருக்கு சார்..
ReplyDeleteஇன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கறேன்...
மச்சி.... கலக்கிட்ட போ...
ReplyDelete-காட்டுவாசி...